சிறிலங்கா தொடர்பான அறிக்கை!

24.09.2022 12:00:00

அமெரிக்காவில் சிறிலங்கா தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வு இடம்பெறும் நிலையில் அங்கு இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர்  ரணில் விக்ரமசிங்க இல்லாத நிலையில், இந்த அமர்வில் சிறிலங்கா சார்பாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்குகிறார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நியூயோர்க்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 77வது அமர்வில் சிறிலங்காவின் அறிக்கையை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பிக்கவுள்ளார்.

இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள அமைச்சர் முன்னதாக இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பல நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பைத் தொடர்ந்து, பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உணவு மற்றும் விவசாய உதவிகளை பிரித்தானியா வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.