தொடர்பில் காத்திருக்கிறோம்’
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரிடம் விசாரணை நடத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் காத்திருப்பு கொள்கையை கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப்பேச்சாளர், அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்பது எனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி சிறிசேன கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதனையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சிறிசேனவிடம் விசாரணை நடத்துவதாகக் கூறியுள்ளது, ஆனால் அது எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
"முன்னாள் ஜனாதிபதி சிறிசேன, தாக்குதல்கள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளார். எவ்வாறாயினும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தனக்குத் தெரியும் என முன்னாள் ஜனாதிபதி தற்போது தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரை கைது செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்'' என, அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.