ரஞ்சனுக்கு உயர் கல்வியை தொடர அனுமதி

12.01.2022 04:42:25

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலை திணைக்களத்தினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக முகாமைத்துவம், தலைமைத்துவம், இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கல்வியை, Zoom தொழில்நுட்பம் ஊடாக விரிவுரைகளை தொடர ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.