ஜேர்மன் ஏற்றுமதி எதிர்பாராதவகையில் மீண்டும் அதிகரிப்பு!
10.06.2026 14:58:16
|
ஜேர்மனியின் ஏற்றுமதி எதிர்பாராதவகையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக ஃபெடரல் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில், ராய்ச்சர்ஸ் பத்திரிகை, ஜேர்மனியின் ஏற்றுமதி 0.5 சதவிகிதம் குறையும் என கணித்திருந்த நிலையில், அதற்கு மாறாக, கடந்த அக்டோபர் மாதத்தில், ஜேர்மனியின் ஏற்றுமதி 0.1 சதவிகிதம் அதிகரித்தது. |
|
அதேபோல, ராய்ச்சர்ஸ் பத்திரிகை, ஜேர்மனியின் ஏற்றுமதி 0.5 சதவிகிதம் குறையும் என இம்முறையும் கணித்திருந்தது. ஆனால், அதற்கு மாறாக, ஏப்ரல் மாத நிலவரப்படி, ஜேர்மனியின் ஏற்றுமதி முந்தைய மாதத்தைவிட 0.9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. |