ஜேர்மனியை எச்சரித்த மேக்ரான்!

22.10.2022 15:41:04

அடுத்த வாரத்தில் பிரான்சும் ஜேர்மனியும் இணைந்து நாடாளுமன்ற கூட்டம் ஒன்றை நடத்துவதாக திட்டமிட்டிருந்தன. ஆனால், அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், பிரான்சுக்கு வேறு முக்கிய கடமைகள் இருப்பதால் அந்த கூட்டம் திட்டமிட்டதுபோல் நடக்காது என்றும் ஜேர்மனி தரப்பு கூறுகிறது.

ஆனால், தங்கள் தரப்பில் அந்த கூட்டத்தை நடத்த தாங்கள் முன்வந்ததாகவும், காணொளி வாயிலாக அதைச் செய்யலாம் என்று திட்டமிட்டதாகவும், ஆனால் ஜேர்மனி தரப்பு கூட்டத்தை தள்ளிப்போடுவதையே விரும்புவதாகவும் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இப்படி இரு தரப்பினரும் மற்றவரை கைகாட்டுவதிலிருந்தே இரு நாடுகளுக்கும் இடையில் உரசல் உருவாகியுள்ளது தெளிவாகியுள்ளது.

இதற்கிடையில், ஜேர்மனி தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது அதற்கு நல்லதல்ல என மேக்ரான் கடுமையாக ஜேர்மனிக்கு எச்சரிக்கை வேறு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.