சிங்கப்பூரில் கமலா ஹாரிஸ்

23.08.2021 14:58:27

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஆசிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று துவக்கினார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், கமலாவின் இந்தப் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், கமலா ஹாரிஸ் முதல் முறையாக ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை நேற்று துவக்கியுள்ளார்.

சிங்கப்பூருக்கு நேற்று காலையில் வந்த கமலா, அந்த நாட்டு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று பேச்சு நடத்துகிறார்.நாளை வியட்நாம் செல்லும் கமலா ஹாரிஸ், அந்நாட்டு தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார். கொரோனா தொற்று பரவல் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து கலந்துரையாடுகிறார்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபரின் ஆசிய சுற்றுப் பயணம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.இது குறித்து அமெரிக்க துாதரக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

துணை ஜனாதிபதி கமலாவின் இந்த பயணம் ஏற்கனவே திட்டமிட்டது. அவரது வருகையால் ஆசிய நாடுகளில் அமெரிக்கா மீது நம்பகத்தன்மை ஏற்படும். சீனாவுக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கவும், இழந்த நட்புகளை மீட்கவும் இந்த பயணம் உதவும்.

இவ்வாறு அவர் கூறினார்.