ஜோ பைடன் எச்சரிக்கை!

22.01.2022 11:39:37

ரஷியா-உக்ரைன் இடையிலான மோதல் கடந்த சில மாதங்களாக வலுத்து வருகிறது. சுமார் 1 லட்சம் படைவீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கிடையே போர் சூழல் உருவாகி இருக்கிறது.

 

இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளன. குறிப்பாக அமெரிக்கா இந்த விவகாரத்தில் ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்த நிலையில், உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறுகையில், “ரஷிய அதிபர் புதினிடம் என்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்துள்ளேன். ரஷிய படைகள் உக்ரைன் எல்லையை தாண்டி சென்றால் அது படையெடுப்பாகவே கருத்தப்படும். புதின் இந்த தேர்வை மேற்கொண்டால், ரஷியா பெரும் விலையை கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.