இந்தியாவுடனான முரண்பாட்டுக்கு, இலங்கை அரசாங்கமே காரணம்
இராமாயண காலத்தில் இருந்தே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் முரண்பாடாகவே இருந்து வருகிறது.
எனினும் அண்மையில் இலங்கை அரசாங்கம் எடுத்த சில தீர்மானங்களே, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளுக்கான காரணம் என்று இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட (Milinda Moragoda) தெரிவித்துள்ளார்.
எனினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குறைவான பதற்றநிலையே நிலவுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய செய்தித்தாள் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர்,
முரண்பாடுகள் தோன்றி வருகின்றபோதும் சுதந்திரத்துக்கு பின்னர் இந்திய இலங்கை தலைவர்கள் தொடர்ந்தும் வெளிப்படையான மற்றும் நேரடியான பேச்சுக்களை நடத்தி வருவதாக மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதை ரத்து செய்யும் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் குறித்தும் மிலிந்த மொரகொட விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,