அண்ணனை தடியால் அடித்து கொன்ற தம்பி !
20
அக்குரஸ்ஸ பகுதியில் தனது சகோதரனை
தடியால் தாக்கி கொன்று எரித்து எஞ்சிய
பாகங்களை பலபாத்த ஓடையில் வீசி எறிந்த
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் தம்பி
கைதுசெய்யப்பட்டதாக அக்குரஸ்ஸ பொலிஸார்
தெரிவிக்கின்றனர்
அக்குரஸ்ஸ, ஹேனேகம், பலபத்த,
உடுகமவத்தஹேன பிரதேசத்தில் தற்காலிகமாக
வசித்து வந்த 65 வயதுடைய மூன்று பிள்ளைகளின்
தந்தையான மனம்பேரிகே கருணாதாச என்பவரே
இவ்வாறு கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார்.
இருவரது வீடுகளும் ஒரே காணியில் மலை
உச்சியில் அமைந்துள்ளதுடன், இறந்தவரின் நிரந்தர
வசிப்பிடம் தெஹியத்தகண்டி பிரதேசமாகும்.
கறுவாப்பட்டை விவசாயம் செய்த குறித்த நபர்
மாதம் ஒருமுறை பலபத்த கிராமத்திலுள்ள வீட்டுக்கு
வந்து கறுவாப்பட்டை அறுவடை செய்து கிடைக்கும்
பணத்தை தெஹியத்தகண்டியிலுள்ள தனது சொந்த
வீட்டுக்கு கொண்டு செல்வதாகவும் உறவினர்கள்
கூறுகின்றனர்.
கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி வீட்டுக்கு
வருவதாகக் கூறியபோதும் அவர் வரவில்லை
என்பதால் அவரது மனைவி பொலி
ஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கிணங்க
பொலிஸார் சந்தேகத்தின்பேரில் தம்பியை
விசாரித்தபோதே உண்மைகள் வெளியாகியுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.