ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி, ராகுல் காந்தி!
07.01.2026 14:06:16
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 28ஆம் தேதி தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜனவரி 28ஆம் தேதி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கன்னியாகுமரி வரவுள்ள நிலையில், தற்போது அதே நாளில் ராகுல் காந்தியும் வரவிருக்கிறார். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.