மீண்டும் மனிதகுலத்தை அச்சுறுத்தும் வைரஸ் தொற்று
கொரோனா வைரஸ் போன்று, மற்றொரு வைரஸும் மனித குலத்தை அச்சுறுத்தக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னாள் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய அரசின் முன்னாள் தலைமை ஆலோசகர் சர் பேட்ரிக் வாலன்ஸ் (Patrick Vallance) இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மீண்டும் ஒரு வைரஸ் நெருக்கயை தடுக்க, நடவடிக்கை எடுப்பதற்கு அவர் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பயங்கரமான அனுபவங்களிலிருந்து உலகம் தற்போது தப்பியுள்ளது. இந்நிலையில், மற்றொரு தொற்று வைரஸுக்கு இடமளிக்கக் கூடாது என பேட்ரிக் வாலன்ஸ் (Patrick Vallance) எச்சரித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு தேவையான உடனடி நடவடிக்கையாகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, மருத்துவ பரிசோதனைகள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளும் திறன் தேவையான அளவில் கிடைக்க வேண்டும் என வலியுத்தியுள்ள அவர், இதனால் பொதுமுடக்கம், சமூக இடைவெளி போன்ற கடுமையான நடவடிக்கைகள் தேவையில்லை எனவும் வலியுத்தியுள்ளார்.