உலகின் முதலாவது ஒன்றிணைந்த மின்னஞ்சல் சேவையான ‘Zapmail’ ஐ இலங்கை அறிமுகம் செய்துள்ளது
உலகின் முதலாவது ஒன்றிணைந்த மின்னஞ்சல் சேவையான ‘Zapmail’ ஐ இலங்கை அறிமுகம் செய்துள்ளதுஉலகின் முதலாவது ஒன்றிணைந்த மின்னஞ்சல் சேவையான ‘Zapmail’, அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு சிறந்த தொடர்பாடல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. குழுக்களிடையே தொடர்பாடல்களை பேணும் போது நிலவும் வினைத்திறனற்ற தன்மைகளை சீர் செய்து கொள்ளக்கூடிய வகையில் உலகின் முதலாவது ஒன்றிணைந்த மின்னஞ்சல் சேவையாக Zapmail அமைந்திருப்பதுடன், தொடர்பாடலை எளிமைப்டுத்தி ஒழுங்கமைப்பது, குழுக்களின் நேரத்தை சேமிப்பது மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அறிமுகம் தொடர்பில் Zapmail இன் இணை ஸ்தாபகர்களான சோன் அமரசிங்க, மார்க் சச்சிந்த, சேய் அந்தனி, தெவ்மின் அபேசேன மற்றும் மெரெடித் ஐவொர் ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், “பாரம்பரிய மின்னஞ்சல் சேவைகள் குழுநிலை ஒருங்கிணைப்புச் செயற்பாடுகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படவில்லை. இதனால், ஒழுங்கமைக்கப்படாத உரையாடல்கள், சம்பந்தப்பட்ட தகவல்களை கண்டறிவதில் சிக்கல் மற்றும் காலம் விரயமாதல் போன்றன ஏற்படுகின்றன. எனவே, எங்கிருந்தாலும் உடனுக்குடன் தொடர்பாடல்களை பேணக்கூடிய தீர்வொன்றை வடிவமைப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தியிருந்தோம். பாரம்பரிய மின்னஞ்சல் சேவைகளினூடாக எமது நிறுவனத்தினுள் அணியினர் ஒன்றிணைந்து செயலாற்றுவதில் எதிர்நோக்கியிருந்த பிரச்சனைகளை நாம் அவதானித்தோம்.
மின்னஞ்சல் தொடர்பாடலின் அனுகூலங்கள் மற்றும் ஒன்றிணைந்து செயலாற்றக்கூடிய வினைத்திறனான வழிமுறைகள் ஆகியவற்றை இணைத்து அதற்கான தீர்வை ஏற்படுத்த வேண்டிய தேவையை நாம் அவதானித்தோம். உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அணிகளுடனான ஆழமான ஆய்வுகள் மற்றும் தயாரிப்பு மேம்படுத்தல்களின் பின்னர், ஒன்றிணைந்த மின்னஞ்சல் சேவையான ‘Zapmail’ஐ அறிமுகம் செய்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதனூடாக பாரம்பரிய மின்னஞ்சல்கள் ஒன்றிணைக்கப்படுவதுடன், பூஜ்ஜிய spam inbox, ஒழுங்கமைக்கப்பட்ட மின்னஞ்சல் தொடர்கள் மற்றும் அணிகளுக்கு ஒன்றிணைந்த பகுதிகள் போன்றன அடங்கியுள்ளன.” என்றனர்.
Zapmail இன் வடிவமைப்பாளர்கள், குழுநிலை செயற்பாடுகளுக்கான தீர்வுகளை தேடியறியும் செயற்பாட்டில் ஈடுபட்டு, நிபுணத்துவமான கட்டமைப்பில் கைகோர்த்து இயங்கியதுடன், நிறுவனத்தின் வர்த்தக நாமத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர். வியாபாரங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் மற்றும் இதர ஏனைய முறையான கட்டமைப்புகள் போன்றன தற்போது அதிகளவு உள்ளடக்கமான டிஜிட்டல் சூழல் கட்டமைப்பை ஏற்படுத்தி தமது இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்கும். மேலும், Zapmail என்பது cloud அடிப்படையிலமைந்தது என்பதால் எந்தவொரு சாதனத்திலிருந்தும் அணுக முடியும் என்பதுடன், அணியினருக்கு தமது தொடர்பாடல்களை உலகின் எங்கிருந்தும் தொடர வசதியளிக்கும்.
இணை-ஸ்தாபகர்கள் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம், எமது இலக்கு என்பது வியாபார தொடர்பாடல்களை எளிமையாக்குவது மற்றும் அனைவருக்கும் வினைத்திறனானதாக அமைந்திருக்கச் செய்வதாக அமைந்திருப்பதுடன், அதனூடாக உலகின் சகல பாகங்களிலும் காணப்படும் நிறுவனங்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்திக் கொள்ள பங்களிப்பு வழங்குவதாக அமைந்துள்ளது.” என்றனர்.
பாரிய, சிறியளவு அல்லது நடுத்தரளவு வியாபாரங்கள், வர்த்தகங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது நிபுணர்களாக இருப்பினும் Zapmail இன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மின்னஞ்சல் சேவையின் அனுகூலத்தைப் பெறக்கூடியதாக இருக்கும். குழுக்களிடையே தொடர்பாடல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒழுங்கமைப்பு செய்யப்பட்டு சீராக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறன் ஆகியதை தகவல் பரிமாற்றத்தில் பேணக்கூடியதாக இருக்கும். Zapmail பாவனையாளர்களுக்கு chat- போன்ற உரையாடல்கள் மற்றும் நிறுவனத்தின் மின்னஞ்சல் தொடர் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கிடையே ஒரே கட்டமைப்பினுள் இலகுவாக மாற்றிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
புரட்சிகரமான புதுவித மின்னஞ்ல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளவும், உலகின் முதலாவது ஒன்றிணைந்த மின்னஞ்சல் சேவையை அனுபவிக்கவும் https://zapmail.app/ எனும் தளத்தைப் பார்க்கவும்.