பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு
'கோமாளி' படத்தின் மூலம் இயக்குநராகவும், 'லவ் டுடே' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஓ மை கடவுளே' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'லவ் டுடே' எனும் வெற்றி படத்தை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்.
இது தொடர்பான அறிமுக அறிவிப்பு பிரத்யேக காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதனும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் பத்து ஆண்டுகளுக்கு முன்பே குறும்படம் ஒன்றில் இணைந்திருக்கிறார்கள் என்றும், பத்தாண்டுக்கு பிறகு அவர்களின் கனவு இப்படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இரண்டு இளம் பட்டதாரிகள் ஒன்றிணைந்திருப்பதால்.. இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து- ஏஜிஎஸ் நிறுவனம் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் மென்மையான காதலை உணர்வுபூர்வமாகவும், நகைச்சுவையாகவும் விவரிக்கும் படைப்பாக இருக்கும் என அவதானிக்கலாம்.