புர்கா அணியாத இளம்பெண் தாலிபான்களால் படுகொலை..!
தாலிபான் படையினர் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் தொடர் வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல அப்பாவி குடிமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களது பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கி இருப்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. சமீபத்தில் 21 வயது ஆகிய ஆப்கானிஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவரை தாலிபான் படையினர் ஒரு சாதாரண விஷயத்துக்காக சுட்டுக் கொன்றுள்ளனர். இது உலகம் முழுவதும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா முகத்தை முழுவதுமாக மூடக்கூடிய ஓர் ஆடை ஆகும். இஸ்லாமிய பெண்கள் தங்கள் தலை மற்றும் முகத்தை வெளியே காட்டக்கூடாது என இஸ்லாமிய ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவர். இஸ்லாமிய மார்க்கத்தில் மிகவும் பற்று கொண்ட தாலிபான் அமைப்பினர் நாசானீன் என்கிற 21 வயது பெண் தலையில் புர்கா அணியாததால் அவரது காரில் இருந்து அவரை வெளியே எடுத்து சுட்டு கொன்றுள்ளனர்.
இச்சம்பவம் ஆப்கானிஸ்தானின் பலாக் பகுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996ம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டுவரை ஆப்கானிஸ்தானில் தாலிபான் கட்டுப்படுத்தியது. அப்போது கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் ஆப்கானிஸ்தானில் பின்பற்றப்பட்டன.
பெண்கள் பள்ளிக்குச் சென்று கல்வி பயிலக்கூடாது, ஆபாச படங்கள் பார்க்கக்கூடாது, திருமணத்திற்கு முன்னர் உடலுறவில் ஈடுபடக் கூடாது போன்ற அடாவடியான இஸ்லாமிய சட்டங்களை அப்போது திணித்தது தாலிபான். தற்போது தாலிபானின் ஆப்கானிஸ்தானில் 223 மாகாணங்களை கைப்பற்றி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த புராதன அடக்குமுறைகளை மீண்டும் தட்டியெழுப்ப தாலிபான் தீவிர முயற்சி மேற்கொள்கிறது. இதன் விளைவாகவே நாசானீனை தலிபான் அமைப்பினர் சுட்டுக்கொன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.