இலங்கை எரிசக்தி அமைச்சரை சந்தித்தார் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர்!
31.05.2022 05:53:03
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை மேம்மடுத்துவதற்கான உடனடி மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கைக்கான நியுசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்பல்டனுடன் கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பானது நேற்றையதினம் வலுசக்தி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நியூசிலாந்துக்கான உயர்ஸ்தானிகருடன் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக பதிவிட்டுள்ளார்.