சூர்யா 45 படத்தில் இணைந்த கதாநாயகி!
கங்குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்தூரை அடுத்த பொள்ளாச்சியில் நடந்தது. அதன் பின்னர் தற்போது கோவை வேளாண்மை கல்லூரியில் செட் ஒன்று அமைத்து படமாக்கி வருகிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஸ்வாஸிகா ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். இவர் இந்த ஆண்டு ரிலீஸாகி கவனம் பெற்ற லப்பர் பந்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.