ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள் பலி

02.04.2024 07:50:17

சிரியாவில் உள்ள ஈரானிய துணை தூதரகம் ஒன்றின் மீது  இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரான் இராணுவத்தின் உயர் அதிகாரிகள்  உட்பட ஏழுபேர் கொல்லப்பட்டுள்ளனர்

சிரிய தலைநகர் டமஸ்கசிற்கு மேற்கே உள்ள பகுதியொன்றில் கட்டிடமொன்று முற்றாக தரைமட்டமான நிலையில் காணப்படுவதை காண்பிக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.

ஈரான் இராணுவம் தனது தளபதிகள் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

பிரிகேடியர் ஜெனரல் முகமட் ரேசா ஜகேடி இஸ்ரேலின் தாக்குதலிற்கு பலியாகியுள்ளார் என  ஈரான் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலே துணை தூதரகத்தை இலக்குவைத்ததாக சிரியா தெரிவித்துள்ளது.