சொன்னதை செய்யும் பூதமான ஜெயம் ரவி
28.03.2024 00:16:00
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிப்பில், அர்ஜூனன் ஜெயம் ரவியை வைத்து ஜூனி என்ற திரைப்படத்ததை இயக்குகிறார்.
இதில் கீர்த்தி ஷெட்டி , கல்யாணி பிரியதர்ஷன், தேவயாணி , வாமிகா கபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. இப்படத்தை தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடவுள்ளனர்.
‘ஜீனி’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்னையில் 2 கோடி இந்திய ரூபா மதிப்பிலான பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.