சீன ஆய்வகம் இன்னொரு வைரஸையும் கசிய விட்டிருக்க வாய்ப்பு
உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த கோவிட் பெருந்தொற்றை கசிய விட்டதாக நம்பப்படும் சீன ஆய்வகம், உலகில் இன்னொரு மிக ஆபத்தாக தொற்றையும் கசிய விட்டிருக்கலாம் என புதிய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2019ல் கோவிட் பெருந்தொற்று போன்று, 2014ல் மிக ஆபத்தான போலியோவின் திரிபு ஒன்றையும் அந்த சீன ஆய்வகம் கசியவிட்டுருக்கலாம் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். |
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் மிக மோசமாக பரவிய போலியோ தொற்றுக்கு 4 வயது சிறுவன் பாதிக்கப்பட, அதே வகையான போலியோ வைரஸ் மாதிரிகள் 200 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள வூஹான் ஆய்வகத்தில் அதே காலகட்டத்தில் பாதுகாத்து வந்துள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பிரான்ஸ் Pasteur ஆய்வகம் தெரிவிக்கையில், WIV14 என அடையாளப்படுத்தப்பட்டுள்ள அந்த போலியோ தொற்றானது எங்கிருந்து உருவானது என்பதில் உறுதியான தகவல் இல்லை என்றாலும் வூஹான் ஆய்வகத்தில் உருவாகி இருக்கலாம் என்பதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. தற்போது வெளியான தகவலானது உலகளாவிய வைராலஜி ஆராய்ச்சியின் அதிர்ச்சியூட்டும் பாதுகாப்பற்ற நிலை என நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், போலியோ தொற்றுக்கு வூஹான் ஆய்வகமே WIV14 என பெயர் வைத்திருக்கலாம் என்றும் Pasteur ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டாக தடுப்பூசி நிறுவனங்களால் மொத்தமாக போலியோ பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது என குறிப்பிடும் நிபுணர்கள் தரப்பு, தற்போது காஸா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் போலியோ பாதிப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் 125 பேர்களுக்கு போலியோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பத்தாண்டுகளில் முதல் முறையாக அமெரிக்காவில் கடந்த 2022ல் போலியோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. |