ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல்

13.02.2021 09:00:00

 

ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தில், இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியுடன் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், அவரது நண்பர்கள் மற்றும் யாழ்.ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பிரதேசத்தில் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.