கொல்கத்தா போலீஸ் கமிஷனரை மாற்றுங்கள்
கொல்கத்தா போலீஸ் கமிஷனரை மாற்றுங்கள் என முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மேற்கு வங்க மாநில கவர்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓயவில்லை என்பதால் பெண் மருத்துவர் நீதி கிடைக்க வேண்டும் என்று மக்களின் போராட்டம் குறித்து அமைச்சரை கூட்டத்தை நடத்த வேண்டும் என முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கவர்னர் ஆனந்த போஸ் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் சரியாக விசாரணை செய்யப்படவில்லை என்பதால் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை மாற்ற வேண்டும் என்றும் பொது மக்களின் கோரிக்கையும் அதுதான் என்றும் இது குறித்து மாநில அரசு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் கவர்னர் ஆனந்த போஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.