ஆளுநர் முஸம்மிலின் மகன் தலைமறைவு; பயணத்தடை விதிப்பு
இளம்பெண் ஒருவரை தாக்கி காயமேற்படுத்தியமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலின் மகனுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸ்ஸம்மிலின் மகனால் யுவதி ஒருவர் தாக்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹெவ்லொக் பார்க் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த யுவதி ஒருவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர் அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
குறித்த பெண் தாக்கப்பட்டமை தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஊவா மாகாண ஆளுனர் A.J.M.முஸம்மிலின் மகன் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸார் கல்கிசை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதன் பிரகாரம், ஊவா மாகாண ஆளுநர் A.J.M.முஸம்மிலின் மகனுக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது