ஆக்சிஜன் சிலிண்டரோடு வாக்களித்த முதியவர்..!!

19.02.2022 12:25:20

சென்னை தியாகராய நகரில் ஆக்சிஜன் சிலிண்டரோடு முதியவர் ஒருவர் வாக்களித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரகுநாத்(70) என்ற முதியவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும் ஆர்வமுடன் வந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதியவர்கள் பலர் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.