பிரித்தானியாவில் அனைத்து அமேசான் கடைகளையும் மூட முடிவு!

24.09.2025 09:13:09

பிரித்தானியாவில் அமேசான் நிறுவனம் தனது அனைத்து மளிகை கடைகளையும் (Grocery Store) மூட திட்டமிட்டுள்ளது. உலகின் முன்னணி ஓன்லைன் வணிக நிறுவனமான Amazon, பிரித்தானியானியாவில் உள்ள தனது 19 Grocery Store-யையும் மூடவுள்ளது. 2021-ல் Ealing Broadway-ல் தொடங்கப்பட்ட இந்த Amazon Fresh கடைகள், பில்லிங் கவுன்டர் இல்லாமல், வாடிக்கையாளர்கள் பொருட்களை எடுத்துகொண்டு வெளியேறலாம் என்ற தொழில்நுட்ப அடிப்படையில் இயங்கின.

 

ஆனால் அந்த முயற்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அமேசான் தெரிவித்ததன்படி, மூடப்படவுள்ள கடைகளில் 5 கடைகள் Whole Foods Market-ஆக மாற்றப்படும்.

Whole Foods என்பது அமேசானின் உடமையிலுள்ள ஆரோக்கியமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பிராண்ட் ஆகும்.

2026-க்குள் பிரித்தானியாவில் 12 Whole Foods கடைகள் அமைய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முடிவால் 250 ஊழியர்கள் பாதிக்கப்படலாம். அவர்களுக்கு மாற்று ஏழை வாய்ப்புகள் வழங்கப்படும் என அமேசான் கூறியுள்ளது.