உக்ரைனிலுள்ள தூதரக பணியாளர்களின் உறவினர்களை வௌியேறுமாறு அமெரிக்கா உத்தரவு

25.01.2022 06:18:42

பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உக்ரைனிலுள்ள தூதரகப் பணியாளர்களின் உறவினர்களை அங்கிருந்து வௌியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, அங்குள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்கள் வௌியேறுவதற்கான அனுமதியையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வழங்கியுள்ளது.

உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரஜைகள் அங்கிருந்து வௌியேறுவது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அந்த திணைக்களத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தற்போதைய பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைனுக்கோ, ரஷ்யாவுக்கோ செல்ல வேண்டாம் எனவும் அங்கு செல்லுமிடத்து துன்புறுத்தல்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.