நாடு முழுவதிற்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

09.05.2022 16:03:29

அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் இன்று அசாதாரண சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

பிரதமருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் காலி முகத்திலுக்குள் நுழைந்தததை அடுத்தே இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

மறு அறிவித்தல் வரையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.