இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

07.01.2022 04:54:42

இந்த வருடத்தில் கடந்த 4 நாட்களில் மாத்திரம் 11,380 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இவர்களில் அதிகமானோர் ரஷ்யாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா, யுக்ரேன், ஜெர்மனி, மாலைத்தீவு, இங்கிலாந்து, கஸகஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் போலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் பல சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.