அவுஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

08.06.2025 14:00:21

அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்பகுதியில் இன்று (08) காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

காலை 4.50 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்தி வாய்ந்த நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதுடன் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.