ஒரே நாளில் முடிவு எடுக்கிறது உலக சுகாதார நிறுவனம்
26.10.2021 17:44:46
அவசர கால பயன்பாட்டுக்கு கோவாக்சின் தடுப்பூசியை அனுமதி வழங்குவது குறித்து ஒரே நாளில் உலக சுகாதார நிறுவனம் முடிவெடுக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக் குழு ஒரு நாளுக்குள் கோவாக்சின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டு அனுமதியைப் பரிந்துரைக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: கோவிட் வைரஸை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும், இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி குறித்த தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, தரவை மதிப்பாய்வு செய்து வருகிறது.அனைத்தும் சரியாக நடந்து, குழு திருப்தி அடைந்தால் அடுத்த ஒரே நாளில் பரிந்துரையை அளிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.