கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் சிம்பு

11.01.2022 12:14:02

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. கடந்த சில ஆண்டுகளாக சரியான ஹிட் கிடைக்காத சிம்புவுக்கு கடந்தாண்டு நவம்பரில் வெளியான மாநாடு படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது பத்து தல, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வருவதற்காக சிம்புவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் சில தினங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் இன்று(ஜன., 11) அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிம்புவின் பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.