ஜேர்மனிக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை!

26.10.2026 14:58:05

ராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் ஜேர்மனிக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிரான ஜேர்மனியின் நிலைப்பாடு அதிகரித்துவருவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. ஜேர்மனி ஈரானுடனான ராணுவ மோதலில் வெளிப்படையாக நுழையுமானால், தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும் உரிமைக்காக, ஜேர்மனி தொடர்புடைய ராணுவத் தளங்கள் முதலான இடங்கள் ஈரானின் தாக்குதலின் இலக்காக கருதப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.

அத்துடன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஜேர்மனியில் வாழும் ஈரான் நாட்டவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துமாறும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.