அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் போல்சோனாரோ!

28.10.2026 14:54:54

ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்க இருப்பதை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. பிரேசிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஆளும் நடப்பு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம்(Luiz Inácio Lula da Silva) எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ(Flávio Bolsonaro) தோல்வியடைந்துள்ளார். இருப்பினும் ஃபிளாவியோ போல்சோனாரோ தன்னுடைய தோல்வியை இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. அதே நேரத்தில் அவர் விரைவில் பிரேசிலை விட்டு வெளியேறுவார் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ஃபிளாவியோ போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்க இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க அதிகாரி ஒருவர் வழங்கிய தகவலில், போல்சோனாரோ மற்றும் அவரது குடும்பத்தினருக்கு விசா வழங்கி அவர்கள் அமெரிக்காவிற்கு நுழைய அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் போல்சோனாரோவின் குடும்ப நலன் விரும்பிகள் வழங்கிய உறுதிப்படுத்தப்படாத தகவலில், போல்சோனாரோ தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஏற்கனவே பிரேசிலை விட்டு வெளியேறி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

போல்சோனாரோ மீதான பண மோசடி வழக்கில், அவரது கடவுச்சீட்டை(passport) உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போல்சோனாரோ நாட்டை விட்டு வெளியேறியது தொடர்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.

போல்சோனாரோ தன் மீதான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பிரேசில் நாட்டில் ஜனாதிபதியாக தொடர இருக்கும் லூலா டா சில்வா, போல்சோனாரோவின் தலைமறைவுக்கும், அமெரிக்காவின் விசா அனுமதி நடைமுறைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த செயல் மிகவும் வெட்கக்கேடானது என்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா தெரிவித்துள்ளார்.