5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில்
28.03.2021 09:02:56
ஜப்பானின் ரியுக்யு தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ரியுக்யு தீவுகளில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 153 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.