அமெரிக்கா வெளியேறினாலும் ஆப்கானிஸ்தானிலிருந்து நாங்கள் வெளியேறமாட்டோம் : கனடா உறுதி

25.08.2021 10:09:00

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதற்கு அமெரிக்காதான் காரணம் என பல நாடுகளிலிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்காவோ அதைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

அத்துடன், ஆகத்து மாதம் 31ஆம் திகதி, முழுமையாக தன் நாட்டுப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற இருப்பதாக உறுதியாக தெரிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஆனால், அமெரிக்கா வெளியேறினாலும், ஆகத்து 31க்குப் பிறகும் கனடாவின் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறாது என்று கூறியுள்ளார் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.

அத்துடன், ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற அனுமதிக்கவேண்டும் என தாலிபான்களுக்கு அழுத்தம் கொடுக்கப்போவதாகவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

முடிந்த அளவு ஆப்கானிஸ்தானியர்களை ஆப்கனிலிருந்து மீட்க G7 நாடுகளுடன் இணைந்து பாடுபட இருப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.