ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு

08.10.2021 15:16:22

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 100 பேர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் நகரில் உள்ள வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சிறுபான்மை ஷியா முஸ்லீம் சமூகத்தால் பயன்படுத்தப்படும் மசூதியில் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமிய மத சிறுபான்மை குழு பயன்படுத்தும் மசூதியில் நிகழ்த்திய சக்திவாய்ந்த வெடிப்பு பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக சாட்சிகள் உள்ளது என்று தலிபானின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.குண்டுஸ் மாகாணத்தில் உள்ள ஷியா மசூதியில் கோசர்-இ-சயீத் அபாத் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, ஷியா மத சிறுபான்மையினரின் உறுப்பினர்கள் பொதுவாக வழிபாட்டிற்காக அதிக அளவில் வருகிறார்கள்.

அப்போது குண்டு வெடித்த நேரத்தில் பிரார்த்தனை செய்ததாகவும், பல உயிர்ச்சேதங்களைப் பார்த்ததாகவும் தலிபானின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுயதாவது:  மேலும், தற்போது சமூக ஊடகங்கள், பிற இடங்களில் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் மக்கள் அழிக்கப்பட்ட மசூதியைத் தேடுவதையும், வழிபாட்டாளரின் உடலை கொடூரமான காட்சியில் இருந்து ஆம்புலன்சிற்கு நகர்த்துவதையும் காட்டுகின்றன. குண்டுஸ் நகரில் உள்ள மசூதியில் அதிக எண்ணிக்கையிலான வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

தலிபான் சிறப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. இதுவரை எந்தக் குழுவும் இதற்குப் பொறுப்பேற்கவில்லை.இதனையடுத்து, ஐஎஸ் தீவிரவாதிகள் காபூலில் இரண்டு கொடிய குண்டுவெடிப்பு உட்பட தங்கள் போட்டியாளர்களை குறிவைத்து தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் மத சிறுபான்மையினரையும் ஐஎஸ் தாக்குதல் நடத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.