வீட்டைவிட்டு வெளியேற்றி விடுவோம்
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் 85 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 50 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலே அவர்கள் மக்கள் மனதில் நின்றுவிடுவார்கள்.
85 நாட்களுக்கு மேல் வீட்டில் இருந்தார்கள் என்றால் அவர் வெற்றியாளர்கள் என்றே கூறலாம். கடந்த வாரம் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார், இந்த வாரம் யார் வெளியேறுவார் என தெரியவில்லை.
எச்சரித்த பிக்பாஸ்
இந்த நிலையில் தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒரு போட்டியாளரை நிகழ்ச்சி குழுவினர் எச்சரித்துள்ளனர்.
அதாவது ADK அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்தார், காரணம் அவர் சிகரெட் பிடித்ததால் தானாம்.
இப்போது அவர் அதிகம் சிகரெட் பிடிக்கிறாராம், இதனால் பிக்பாஸ் வீட்டில் டென்ஷன் உள்ளது தான், ஆனால் உடலுக்கு ஆகாததை மீண்டும் மீண்டும் செய்வது சரியில்லை, இனி சிகரெட் பிடித்தால் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரிக்க ADK மன்னிப்பு கேட்டிருக்கிறார்.