விஜய் முன்னிலையிலேயே விமர்சித்த அருண் ராஜ்!

08.03.2026 12:52:55

தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ. 2,500 வழங்கப்படும் என மகளிர் தினவிழாவில் பேசியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இந்நிலையில்,பெண்களுக்கு ரூ. 1000, பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 இந்த இலவசங்களைத் தவிர திமுக வேறு எதாவது உருப்படியான திட்டம் கொண்டுவந்துள்ளதா? என பேசிய தவெக நிர்வாகிகள் பேச்சு சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. ஒரே கட்சியில் ஒரே திட்டத்துக்கு இருவேறு கருத்துகளா? நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று சென்னை அருகே மாமல்லபுரத்தில் மகளிரி தின விழா கொண்டாட்டப்பட்டது. இதில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தவெக ஆட்சிக்கு வந்தால் கொண்டு வரப்படும் நலத்திட்டங்களில் சிலவற்றை அறிவிவித்தார். குறிப்பாக பெண்கள் நலம் சார்ந்த சில திட்டங்களை விஜய் அங்கு பட்டியலிட்டிருந்தார். இதனை அங்கிருவந்தவர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

குறிப்பாக,

1. பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாகா உருவாக்கப்படும்,

2. மதிப்புமிகு மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2500 வழங்கப்படும் (நிபந்தனை: 60 வயது வரையிலான பெண்களுக்கு உரிமை தொகை; மத்திய, மாநில ஊழியர்களுக்கு விலக்கு)

3. அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள்

4. அண்ணன் சீர் திட்டம்: 1 சவரன் தங்கம், 1 பட்டு சேலை

5. காமராஜர் கல்வி உறுதித் திட்டம்: 1 முதல் +2 வரை பயிலும் மாணாக்கர்களின் தாய்(அ) பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித்தொகை

6. வெற்றிப் பயணத் திட்டம்: அரசு போக்குவரத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்

7. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக "ராணி வேலுநாச்சியார் படை" உருவாக்கப்படும்

8. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவான நீதி வழங்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றம் ஏற்படுத்தப்படும்

9. பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Smart Panic Button பொருத்தப்படும்

10. ரேசன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா நாப்கின்கள் வழங்கப்படும்

11.சிங்கப்பெண்கள் மேம்பாட்டுத் திட்டம்: மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5 லட்சம் கடன் 100% மானியத்தில் வழங்கப்படும்

12. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என 12 திட்டங்களை விஜய் அறிவித்திருந்தார்.

இதில், மகளிர் உரிமைத் தொகை, தாலிக்குத் தங்கம், பேபி கிட், இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட திட்டங்கள் ஏற்கனவே தமிழகத்தில் நடைமுறையில் உள்ள அல்லது அதிமுக திமுகவால் அறிமுகப்படுத்தப்பட்ட, அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக, அதிமுகவின் திட்டங்களையே பெயர் மாற்றி அறிவித்துள்ளார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் திட்டங்களையே விஜய் டப்பிங் செய்துள்ளார் என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது. இந்நிலையில், தவெக நிர்வாகி அருண் ராஜ் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளக்களில் பகிரப்பட்டு வருகிறது.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் அரங்கில் விஜய் தலைமையில் கடந்த நவம்பர் 5ஆம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய," முதலமைச்சர், துணைமுதலமைச்சர் முதல் எம்.எல்.ஏ. வரை திமுகவினர் எந்தக் கூட்டத்திற்கு சென்றாலும், பெண்களுக்கு ரூ. 1000 வருகிறதா என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. அதனைத்தான் அவர்கள் ஆட்சியின் சாதனையாகவும் சொல்லிவருகிறார்கள்.

இலவச பஸ், பெண்களுக்கு ரூ. 1000, பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1,000 இந்த இலவசங்களைத் தவிர திமுக வேறு எதாவது உருப்படியான திட்டம் கொண்டுவந்துள்ளதா? ஒரு கட்சி பெண்களுக்கு ரூ. 1000 என்கிறார்கள், மற்றொரு கட்சி ரூ. 2,000 என்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா? என பேசியிருந்தார். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எதிராக அருண்ராஜ் பேசியிருந்த நிலையில் தற்போது அதே கட்சியின் தலைவரான விஜய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்பதை பெயர் மாற்றி கூடுதலாக 1500 ரூபாயோடு 2500 ரூபாய் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார். ஒரே கட்சியில் ஒரே திட்டம் குறித்து நிர்வாகிகள் இருவேறயாக பேசியிருக்கின்றனர். கடந்த முறை இந்தத் திட்டத்தை விமர்சித்து பேசிய அருண்ராஜ் தற்போது விஜய் திட்டத்தை விமர்சிப்பாரா? என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.