மரண பயம் ஏற்படும் அளவுக்கு கூட்ட நெரிசல்.
|
உளுந்தூர்பேட்டை மாநாட்டில் மிக பெரியளவில் விசிக தொண்டர்கள் திரண்டதாகவும் மரண பயம் மேலோங்கும் நிலை இருந்ததாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் கரூர் சம்பவம் போல நடந்துவிடக்கூடாது என்பதாலேயே தனது பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டதாக திருமாவளவன் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று பிரம்மாண்டமான "தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு" நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விசிக நிர்வாகிகள் திரண்டதால் மிக பெரிய கூட்டம் கூடியது.
|
|
மேடையில் திருமாவளவன் ஏறிய போது பலரும் மேடையில் ஏறினர். இதனால் மேடையில் கூட்டம் அதிகரித்தது. திருமாவளவன் மேடையில் மட்டுமின்றி கூட்ட திடலிலும் கூட கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. இதனால் வெறும் சில நிமிடங்களில் திருமாவளவன் தனது பேச்சை முடித்துக் கொண்டார். இதற்கிடையே நேற்றைய தினம் மாநாட்டு திடலில் என்ன நடந்தது என்பது தொடர்பாக திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மரண பயம் ஏற்படும் அளவுக்கு கூட்டம் அதிகமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "உளுந்தூர்பேட்டை மாநாட்டில் பங்கேற்ற இளைஞர்கள், அத்தனை நெரிசலிலும் கூட, மரண பயம் மேலோங்கி இருந்த நெரிசலிலும் கூட, என்னோடு போட்டோ எடுத்து கொள்ள ஆர்வம் காட்டினர். அது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த நெரிசலுக்கு மத்தியிலும் ஒவ்வொருவரை பார்த்தும் பாதுகாப்பாக திரும்பி செல்லுங்கள் என்று சொன்னேன். வயது முதிர்ந்தவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் இந்த நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்ற கவலை எனக்கு மேலோங்கி இருந்தது. இதன் காரணமாகவே எனது உரையை நான் 3 நிமிடங்களில் நிறைவு செய்துவிட்டேன். கரூரில் நடந்தது போல இங்கு நடந்துவிடக்கூடாது. மக்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். நெரிசலில் சிக்கி யாரும் உயிரிழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்ற பதற்றம் எனக்குள் இருந்தது. இதன் காரணமாகவே ஓரிரு நிமிடங்களில் எனது உரையை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக திரும்பி செல்லுங்கள் என கூறினேன். இன்னும் சில நிமிடங்கள் நான் பேசிக் கொண்டே இருந்திருந்தால் நெரிசல் எந்தளவுக்கு போய் இருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. கடல் அலை வீசுவது போல இருந்தது. தொண்டர்கள் ஒருவரை ஒருவர் தற்காத்து கொள்ளும் அளவுக்கு நிலைமை இருந்தது. வாக்கு வங்கி விஜய் வந்த பிறகு பல கட்சிகள் தங்கள் சொந்த வாக்கு வங்கியை இழந்துள்ளன. விசிக போட்டியிட்ட இடங்களில் கூடுதலாக வெல்ல முடியவில்லை என்ற போதிலும் நாம் வலிமை பெற்றுள்ளோம். அதை உணர்த்தும் வகையிலேயே இந்த மாநாடு நடந்துள்ளது. இந்த மாநாட்டை வெற்றி பெற வைத்த விசிக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மாநாட்டை மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால், கூட்டம் அதிகமாகிவிட்டது. இரவு நேரத்தில் திரண்டிருந்த கூட்டம் வெளியேற முடியாமல் போனால்.. அதனால் நெரிசல் ஏற்பட்டு சிக்கல் ஏற்படும் என்ற கவலை இருந்தது. இரவு நேரத்தில் கூட்டத்தை முடக்கி போடக்கூடாது என்ற நோக்கம் இருந்தது. அந்த திடலில் இருந்தவர்கள் 50% பேர் தான். மீதமுள்ள 50% பேரால் உளுந்தூர்பேட்டைக்கு உள்ளேயே வர முடியவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே பேசினேன் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்தவர்களை போலீசார் தடுத்துள்ளனர். 20 கிமீ வரை வாகனங்கள் முடங்கின. அவர்களால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. இது அந்தளவுக்கு வரலாற்று சிறப்புமிக்க மாநாடு. நல்வாய்ப்பாக இதில் உயிர் சேதம் பெரிதாக எதுவும் ஏற்படவில்லை. அந்த கூட்டத்தில் என்னால் சில நிமிடங்கள் மட்டுமே பேச முடிந்தது. எதிர்காலத்தில் நாம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அந்த கூட்டத்தில் பதிவு செய்தேன். இதுவரை ஆளும் கட்சியாக பயணித்தோம். இனி ஆளும் கட்சியாக மாற வேண்டும் என கூறினேன். விசிக ஒட்டுமொத்த தமிழர்களுக்காக குரல் கொடு |