விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ சென்சார் தகவல்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கடந்த சில ஆண்டுகளாக வில்லன் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் ஹீரோவாக நடித்த ‘மகாராஜா’ என்ற திரைப்படம் வரும் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகயுள்ளது.
விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்ற பெருமையை பெற்ற இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் கொடுத்த தகவல் வெளியாகியுள்ளன,
‘மகாராஜா’ திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். மேலும் இந்த படம் 142 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ரன்னிங் டைம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கியுள்ளார்.