புது சீரியலில் கமிட்டான மோனிஷா

11.06.2022 16:12:23

விஜய் டிவியின் 'அரண்மனைக்கிளி' தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார் மோனிஷா. அரண்மனைக் கிளி சீரியலின் டிஆர்பி அதிகமாகிக் கொண்டிருந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனினும், கேரளத்து பெண்ணான மோனிஷா தமிழ் ரசிகர்கள் மனதில் தனியொரு இடத்தை பிடித்துவிட்டார். தொடர்ந்து 'நாம் இருவர் நமக்கு இருவர்' சீசன் 2 விலும் மகா ரோலில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த தொடரில் மோனிஷாவின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அந்த தொடரும் அண்மையில் முடிவுக்கு வர மோனிஷாவின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். ஆனால் தற்போது, அரண்மனைக்கிளி நாயகிக்கு மீண்டும் ஒரு கிளி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது கலர்ஸ் தமிழில் புதிதாக உருவாகி வரும் 'பச்சக்கிளி' என்ற தொடரில் மோனிஷா ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்த புதிய தொடர் வருகிற ஜூலை 4 முதல் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.