3 ஈரான் எண்ணெய் கப்பல்களை சிறைப்பிடித்த இந்தியா!
|
ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர். இந்திய கடல்சார் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் அத்துமீறி நுழைந்த மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய அதிகாரிகள் சிறைப்பிடித்துள்ளனர். இந்த கப்பல்கள் அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு உள்ளான ஈரான் நாட்டுடன் தொடர்புடைய நிழல் கடற்படை குழுக்களை சேர்ந்தவை என சந்தேகிக்கப்படுகிறது. |
|
இந்திய கடலோர காவல்படையினர் மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தூரத்தில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது இந்த 3 கப்பல்களும் சிறைப்பிடிக்கப்பட்டு அதன் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரிகளை தவிர்க்கவும், பிரச்சனைக்குரிய இடங்களில் இருந்து வரும் அடையாளம் மறைக்கப்பட்ட கப்பல்கள் தங்கள் சரக்குகளை பரிமாறிக் கொள்வதை இலக்குகளாக கொண்ட கப்பல்களையும் குறிவைத்து இந்திய கடலோர காவல்படையினர் இத தேடுதல் வேட்டையை தொடங்கினர். இந்திய அதிகாரிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட கப்பல்கள் அமெரிக்காவின் OFAC அமைப்பினால் தடை செய்யப்பட்ட கப்பல்களுடன் ஒத்துப்போவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த கப்பல்கள் ஈரானுடன் தொடர்புடையவை என்று கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டாலும், இதுவரை ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனம் இதில் தங்களுக்கு எந்தவொரு தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளது. |