ஊர் ஊராக யாசகம் பெற்று பணத்தை இலங்கை தமிழர்களுக்கு கொடுத்த நபர்!
05.07.2022 15:42:14
இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் வழங்க முதியவர் ஒருவர் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை கொடுத்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் டிஆர்ஓ பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது தூத்துக்குடி மாவட்டம், ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டி (72) என்பவர், பிச்சையெடுத்து சேமித்து வைத்த ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களின் நலவாழ்வு நிதிக்கு வழங்குமாறு, டிஆர்ஓ பிரியதர்ஷினியிடம் அளித்தார்.
மேலும், அது தொடர்பான மனுவையும் அளித்தார். பின்னர் பால்பாண்டி கூறுகையில், ஊர் ஊராக சென்று பிச்சை எடுத்து சேமித்து, மாணவர்களின் படிப்புக்கும், இயலாதவர்களுக்கும் அளித்து வருகிறேன் என கூறியுள்ளார்.