வடக்கு காசாவில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக் கைதி!
இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவர் வடக்கு காசா பகுதியில் கொல்லப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் பெண் இஸ்ரேலிய பிணைக் கைதி ஒருவர் கொல்லப்பட்டு இருப்பதாக ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. |
இது தொடர்பாக ஹமாஸ் பிரிவு வழங்கிய தகவலில், சம்பத்தப்பட்ட பகுதியில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் பெண் பிணைக்கைதி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. வடக்கு காசாவில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பாதுகாக்க நியமிக்கப்பட்ட போராளிகளுடன் மீண்டும் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலின் போது பெண் பிணைக்கைதி கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. அல் கஸ்ஸாம் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபைடா வழங்கிய தகவலில், மேலும் ஒரு பெண் பிணைக்கைதி இதில் படுகாயம் அடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலை இஸ்ரேலிய இராணுவம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. |