லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள எச்சரிக்கை!
ஹிஸ்புல்லா அமைப்பின் நிலைகளை விரைவில் குறிவைத்து தாக்க இருப்பதால், லெபனானின் தெற்கு பெய்ரூட்(Beirut) பகுதி மக்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேலிய படைகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு புகுந்து தாக்குதலை தொடங்கினர். ஹமாஸ் இந்த தாக்குதலில் 1200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதுடன், 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்கு பிடித்து செல்லப்பட்டனர். |
இதனை தொடர்ந்து தொடங்கிய இரு தரப்பு போர் நடவடிக்கையில், பாலஸ்தீனத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 45,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இதில் உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்-வில் செலுத்தப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் போரானது தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். அந்த வகையில் சமீபத்தில் இஸ்ரேலின் ராணுவ மூலோபாய இருப்புகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் டெல் அவிவ் மற்றும் இஸ்ரேலின் பல பகுதியில் அபாய சைரன்கள் ஒலிக்கப்பட்டது. இந்நிலையில் ராணுவ நடவடிக்கையை முன்னிட்டு இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானில் உள்ள கடற்கரைகளை விட்டு பொதுமக்கள் விலகி இருக்குமாறு எச்சரித்துள்ளது. அத்துடன் தற்போது தெற்கு பெய்ரூட்டில் உள்ள பொதுமக்களும் தங்கள் குடியிருப்புகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் வரைபடத்தில் இரண்டு கட்டிடங்களை குறி வைத்துள்ள நிலையில், குடிமக்கள் அதிலிருந்து 500 மீட்டர் விலகி இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. |