
ஜனாதிபதி இன்று அமெரிக்காவிற்கு விஜயம்.
22.09.2025 08:23:00
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (22) இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ள இருக்கின்றார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்பார்.