மீசாலையில் சிறிதரன் எம்.பியின் வாகனம் விபத்து.
01.02.2026 15:13:20
|
யாழ்ப்பாணம்- மீசாலை வடக்கு பகுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பயணித்த வான் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்த இருவர் காயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். |
|
சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினரின் வானின் சாரதி கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கு சியாமளா சந்தி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது வேனில் பயணித்தபோது சனிக்கிழமை விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். |