தென்னிந்திய திரையுலகின் இலங்கை தமிழ் நகைச்சுவை நடிகரின் மறைவு

24.12.2023 14:44:48

தென்னிந்திய திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரான  இலங்கை தமிழர் போண்டா மணி உடல்நலக்குறைவால் தனது 60 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவருடைய தாயகமான இலங்கையில் உள்ள மன்னாரில் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை ஆரம்பித்து நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார்.
 

இந்நிலையில் இலங்கையிலிருந்து அகதியாக இராமேஸ்வரம் சென்று  நடிகராகியுள்ளார்.

 

தமிழில் 1991ஆம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமான நகைச்சுவை நடிகர் போண்டா மணி சுமார் 270 படங்களில் துணை காமெடி நடிகராக நடித்துள்ளார்.