பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் ரஷ்யா!

26.09.2025 07:53:32

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா 2025-ஆம் ஆண்டின் இறுதி வரை பெட்ரோல் ஏற்றுமதியை தடைசெய்யும் திட்டத்தை நீட்டித்துள்ளது. அதேசமயம், டீசல் ஏற்றுமதிக்கும் பகுதி தடை விதிக்கப்பட உள்ளது. இந்த முடிவை ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் அறிவித்துள்ளார்.

உக்ரைன் நடத்திய ட்ரான் தாக்குதல்களால் பல ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சில ரஷ்ய மாகாணங்களில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

டீசல் ஏற்றுமதி தடை, மறு-விற்பனையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். உற்பத்தியாளர்களுக்கு அல்ல.

ஆனால், பெட்ரோல் ஏற்றுமதி தடை உற்பத்தியாளர்கள் மற்றும் மறு-விற்பனையாளர்கள் இருவருக்கும் பொருந்தும்.

இருப்பினும் ரஷ்யா மற்றும் சில நாடுகளுக்கிடையிலான அரசாங்க ஒப்பந்தங்கள் இந்த தடை விதிமுறைகளுக்கு உட்படாது. மங்கோலியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி தொடரும்.

ரஷ்யாவில் உள்நாட்டு சந்தைக்கு எரிபொருள் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த முடிவுகள் ரஷ்யாவின் எரிபொருள் கொள்முதல் மற்றும் ஏற்றுமதி கொள்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும். இது உலகளாவிய எரிபொருள் விலை நிலவரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.