புதிய ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பிரதமருடன் சந்திப்பு
21.10.2021 06:39:48
பரிசுத்த பாப்பரசரினால் அண்மையில் கண்டி மாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்ட வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை நேற்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.
கண்டி மாவட்டத்தின் ஆயர் பதவிக்கு மேலதிகமாக சிலாபம் மறைமாவட்ட ஆயராகவும் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகை பணியாற்றி வருகின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆயர் வெலன்ஸ் மெண்டிஸ் ஆண்டகைக்கும் இடையே நட்பு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.