
ஜேர்மனியில் புலம்பெயர்வு விதிகள் கடுமை!
ஜேர்மனி அரசு புலம்பெயர்வு விதிகளில் கடுமையான மாற்றங்களை அறிவித்துள்ளது. மே 28-ஆம் திகதி வாயிலாக பிரதமர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தலைமையிலான அரசு புதிய சட்டங்களை நிறைவேற்றியது. இந்த மாற்றங்கள் சட்டவிரோத புலம்பெயர்வைக் கட்டுப்படுத்தவும், ஒருங்கிணைப்பு அமைப்புகளின் சுமையை குறைக்கவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, நன்கு ஒருங்கிணைந்த (well-integrated) புலம்பெயர்ந்தோர் C1 நிலை ஜேர்மன் மொழித் திறனுடன் மூன்று ஆண்டுகளில் குடியுரிமை பெற முடிந்தது. |
ஆனால் தற்போது அந்த விரைவான நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இனி எல்லா விண்ணப்பதாரர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஜேர்மனியில் சட்டப்படி வாழ்ந்திருக்க வேண்டும். மேலும், B1 நிலை ஜேர்மன் மொழி திறன் மற்றும் பொருளாதார தன்னிறைவை நிரூபிக்க வேண்டும். மேலும், சில பிரிவுகளில் குடும்ப விசா விண்ணப்பங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இது குடும்பங்களின் மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்புகளைப் பாதிக்கக்கூடும் என்பதுடன், சமூகத்தில் அதற்கான எதிர்வினையையும் உருவாக்கியுள்ளது. இந்த மாற்றங்கள், ஜேர்மனியில் குடியுரிமை பெற விரும்புவோருக்கு புதிய சவால்களை ஏற்படுத்தும் என தெரிகிறது. |